பிறவாத கவிதை
ஒவ்வொரு புள்ளியாய்
கவனமாக வைத்தேன்...
இடமிருந்து வலம்
வலமிருந்து இடமென
ஏராளமாய்...
எண்ணங்கள் திரள்கொண்டு
மனக்கதிர்கள்
ஒளிவீச எத்தனித்தன...
புள்ளிதோறும் விதவிதமான
உருவகங்கள்...
சமூகத்தை சாடி
பெண்மையை போற்றி
காதலை தூற்றி
பின் அதையே வாழ்த்தி
சுயத்தை முகர்ந்து
என்னையே கேலி செய்து....
எப்படி இணைத்து பார்த்தும்
இறுதிவரை முழுமையடவில்லை
அப்படியே விட்டு விட்டேன்
அந்த கோலத்தை
பின்னொரு நாளில்
வண்ணம் கொள்ளுமென...