மிக சிறந்த நண்பன்
மிக சிறந்த நண்பன் இவன்
அருமையான ஆசான் இவன்
தன்னலமில்லா தலைவன் இவன்
தன்னிகரில்லா வழிகாட்டி இவன்
அண்டத்தை தன்னுள் அடக்கும் சிறந்தவன் இவன்
அறிவை பெருக்கும்
கருத்தின் தெளிவு இவனுள் இருக்கும்
அன்பு காட்டும் தாய் இவன்
பலரின் உணர்வுகளின் பதிவு இவன்
எதிர்ப்பு, ஆதரவு இரண்டும் கொண்டவன் இவன்
பார் உயர படைக்கப்பட்டவன்
பலர் கையிலும் திகழ்பவன்
அவனே......
என் அருமை நண்பன்
................புத்தகம்.............
-கலைப்பிரியை