அன்னை தமிழ்

அன்னை தமிழ் மீது
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள்
மீண்டும் எழும் எம்தமிழ்//
ஆதரவு இல்லை என்றால்
மீண்டும் அழிவின் மடியில் சாய்ந்து
மாண்டு போவாள் எம்தமிழ்//
தமிழ் அன்னையின் வித்துக்களை
மனதில் ஊன்றி விட்டால்//
எம் கரங்களில்
தமிழ் அன்னை குழந்தையாக தவழ்வால்
இல்லையெனில் தமிழ் அன்னை தொலைந்து போவாள்//
ஆனந்தமாக தமிழ் அன்னையை வளர்த்து
அற்புதமான சிந்தனையில் தமிழ் முத்துகளை பொருத்தி
செயல்களை அழகாக உருவாக்கிவிட்டால்
உலகம்மெங்கும் தமிழ் அன்னை நலம் கொள்ள
தமிழ் அன்னையும்
அழகாக வளந்துவிட
நிலையான வாழ்வும் கொண்டு
நம்மை வாழ வைப்பாள்

எழுதியவர் : காலையடி அகிலன் (8-Apr-18, 9:46 am)
Tanglish : annai thamizh
பார்வை : 238

மேலே