தமிழ் புத்தாண்டு

சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

புதிது என்றாலே உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், என புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம். அதுபோலத்தான் 12 மாதங்கள் முடிந்து புதிதாய் ஒரு ஆண்டு பிறக்க தொடங்கினாலே அனைவருமே அதை கொண்டாட தொடங்கிவிடுகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் வரலாறு:
புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் எப்படி வந்தது என்பதை சற்றே பின்னோக்கினால் மெசபடோமியாவில் தான், முதன் முதலில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது. பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

எழுதியவர் : Tamilan (11-Apr-18, 10:56 am)
சேர்த்தது : மகேஸ் தமிழன்
Tanglish : thamizh puthandu
பார்வை : 248

மேலே