தாலாட்டு

கண் உறங்கு கண்ணே
கண் உறங்கு

பொன் மேனி போக
பொன்மணியை யார் அடிச்சாரோ?
அழாமல் நீ உறங்கு
என் அன்பு செல்லமே

கதை கூற யாரும் இல்லை
கதை பேச யாரும் இல்லை
கண்மணியே கண் உறங்கு

செவ்வாய் கொண்டவளே
செவ்வந்தி பூவானவளே
கண் உறங்கு கண்ணே
கண் உறங்கு

அத்தி பூ ரத்தினமே
அத்தை உன்னை பார்த்துபார்
கண் உறங்கு கண்ணே
கண் உறங்கு

பால், பழம் தந்திடுவார்
பாய், மெத்தையில் படுக்க வைப்பார்
கண் உறங்கு கண்ணே
கண் உறங்கு

பொழுது சாயும் நொடியிலே
வீடு திரும்பி உன்னை அணைச்சுகுவேன்..........
கண் உறங்கு கண்ணே
கண் உறங்கு

வேலைக்கு நேரம் ஆச்சு
கண்ணே கண் உறங்கு
கண்மணியே நீ உறங்கு!!

அம்மா வரும் போது நிறைய பொம்மைகள் வாங்கி வந்துடுவேன்....
கண்ணே கண் உறங்கு
என் கண்மணியே நீ உறங்கு.......

எழுதியவர் : உமா மணி படைப்பு (22-Apr-18, 2:43 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thaalaattu
பார்வை : 71

மேலே