புதையல் 3
சிங்காரம் நினைத்ததை முடித்து விட்டார்.
புதையல் இருக்கும் இடத்தை புதிரில்
சொல்லிவிட்டார்.முதல் பேரன் அவர்
சொன்னதை தன் மனைவி, அப்பா அம்மா விடம் சொல்லஅவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.அந்த ஊர்
நன்கு தமிழில் ஆர்வமுடைய அறிஞர்களிடம் கேட்கலாம் என அப்பா யோசனை சொல்லுங்க,மகனோ இல்லை அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் பங்கு கேட்பார்கள்.அது மட்டும் அல்ல
அவர்கள் முன் சென்று எடுத்து கொள்வர் என கூறி மறுத்தான்.
என்ன செய்ய?இதை எவ்வாறு கண்டு பிடிக்க அப்பா பொறுமையாய் யோசித்து உன் அப்பா உனக்கு இது போன்ற கதை அல்லது புதிர் சொல்லி இருக்கிறாரா என்று.
ம்அஅஅ ஞாபகம் இல்லை டா.சரி
நான் மீண்டும் தாத்தாவிடமே போய் கேட்கிறேன்.
நடுநிசி நாய்கள் கத்திகொண்டிருக்க
ஆந்தை அலறும் நேரம் அனைவரும்
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க முதல் பேரன் தன் தாத்தா அறைக்குள்
நுழைந்தான்.தாத்தா தாத்தா எழுந்திரு எழுந்து என்னை பாருங்க.
என் தூக்கத்தில் இருந்த தாத்தாவை எழுப்பினான்.
என்னடா என்ன வேண்ணும் எதற்கு
எழுப்பினாய் என கேட்க, தாத்தா புதையல் ரகசியங்கள் என்னன்னு எனக்கு மட்டும் சொல்லு என் கெஞ்ச தொடங்கினான்.புதையல் ரகசியங்கள் சொல்ல மாட்டேன்.ஆனால் குறிப்பு மட்டும் தருகிறேன் உள் வாங்கி கொள்.
சரி அதுவாவது சொல்லு..என்று சினுங்கினான்.
இங்கிருந்து நம் கோவிலை அடுத்து
இரு மையில் தூரம் சென்றால் ஒரு நதி தாண்டி அடர்ந்த காடு அடுத்து இரு மலைகள் ஏற உச்சியில் நின்று அடுத்த பக்கத்தில் ஒரு பெரிய குகையில் சில சிற்பங்கள் இருக்கும்
கல்வெட்டும் இருக்கும்.அந்த கல்வெட்டில் தான் அந்த புதையல் இருக்கும் இடம் தெரியும் என முடித்தார்.
முதல் பேரன் தொடர்ந்து வந்த அடுத்த இரண்டு பேரன்கள் ஒழிந்து நின்று கொண்டிருப்பதை அறிந்து
சிங்காரம் தாத்தா தன் குறிப்பை கொடுக்க மூன்று பேரன்களும் ஒருவருக்கொருவர் தெரியாமல் குறிப்பை அறிந்தனர்.
அவர்கள் ஊரில் திருவிழா கோலாகலமாக இருக்க இந்த திருவிழாவை முடித்து பிறகு செல்வோம் என்று முடிவு செய்து வைத்திருந்தனர்.