துரோகம்

உடலுக்கு உயிராக நினைத்தேன்
இரவுக்கு நிலவாக நினைத்தேன்
பூமிக்கு மழையாக நினைத்தேன்
பயிருக்கு வேறாக நினைத்தேன்
தனிமையில் தாய்மையாக நினைத்தேன்
கண்ணீரில் கைகுட்டையாய் நினைத்தேன்
ஆனால் நியோ...
நெருப்பின் அனலானாய்
வேதனையில் வலியானாய்
என் தவிப்பில் குளிர்காய்ந்தாய்
நெஞ்சில் குத்தும் நண்பன் என நினைத்தேன்
முதுகில் குத்தும் துரோகி ஆனாய்
மன்னித்து விடுகிறேன் பழகிய பாவத்திற்கு
இருந்தாலும் ஏற்க முடியவில்லை நீ செய்தது
வலிகளில் வலி சேர்த்தது நீ செய்த
துரோகம் ...

எழுதியவர் : ஹேமாவதி (15-May-18, 7:38 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : throgam
பார்வை : 1101

மேலே