கடவுளின் மறுவடிவம்
கடவுள் நம்மிடையே இருக்கிறார் என்பதற்கு
குழந்தைகள் சாட்சி ...
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்
பெரியவர்கள் சொன்னார்கள் .
ஆனால் இன்று நமக்கு குழந்தையை பார்க்க நேரம் இல்லை
பேச நேரம் இல்லை
கொஞ்ச நேரம் இல்லை ...
நேரம் முழுவதையும் பணம் ஆக்கிரமித்து கொண்டால்
பிறகு எங்கே பந்தம்,பாசம் எல்லாம்
அதனாலதான் குழந்தை பள்ளிகள் அதிகமாகி விட்டன
அவர்கள் கொஞ்சி கொஞ்சி பேசுவதை கேட்க நமக்குத்தான் நேரம் இல்லை
சரி பாட்டிமார்கள் கேட்டு சந்தோச படட்டும் என்று பார்த்தால்
அவர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில்
சேர்த்து விட்டோம் ....
குழந்தைகள் அம்மா என்று பேச ஆரம்பிப்பதை விட
எ பார் ஆப்பிள்
என்றுதான் ஆரம்பிக்கிறார்கள் ...
என்ன செய்ய நாம்
குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொன்னார்கள்
இதனை வாய்ப்புகள் கொடுத்ததும் நாம் இறைவனை
காண மறுக்கிறோம்
இல்லாத இடத்தில தேடுகிறோம்
கண்ணனுக்கு முன் தெரியும் இறைவனை என்று
நாம் பார்க்கிறோமோ
அன்றுதான் நாம் உண்மையான வாழ்க்கையை
வாழ்கிறோம் என்று அர்த்தம்
இப்போது நாம் இருப்பது இயந்திரத்தனம் .
இதை விட்டு வெளியே வர சிறிதாவது யோசிப்போம்
குழந்தைகளை நேசிப்போம்
மதிப்பெண் எடுக்கும் கருவிகளாக அல்ல
அன்பை சொல்லித்தர வந்துள்ள ஆசிரியர்களாக ....

