உன் விழிகளால்

பெண்ணே உன் விழிகளை ஒரு நொடி பார்த்த பின்பு நான்
தீயை எடுத்து தேன்அமிர்தமென நினைத்து தின்றுவிட்டேன்
கண்ணே உன் கண்களை கண்ட பின்பு நான்
கார் இருளில் கூட கண்களை திறக்காமல் நடக்கிறேன்
அன்னமே உன் அழகிய விழிகளில் விழுந்த பின்பு நான்
அம்மாயென அழைக்க முடியாமல் அமைதியாகிவிட்டேன்
தேவதையே உன் கண் ஒளியில் ஒளிர்ந்த பின்பு நான்
உலகத்தின் ஓசையை உணராத உணர்சியில்லாதவனாகிவிட்டேன்
அன்பே உன் அழகிய விழிகளால்
நான் பாசம் யாவையும் அறியாமல்
உன்னையே தேடும் பைத்தியக்காரனாகிவிட்டேன்!!!

எழுதியவர் : M Chermalatha (2-Jun-18, 12:54 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : un vilikalall
பார்வை : 781

மேலே