என்றும் நீ

என்னை பிரிந்தவளுக்கு இன்று பிறந்த நாள்
அவள் நலம் பெற விரும்புகிறேன்

அன்பே உன் வாழ்க்கை கண்ணீர் தேங்கா பூந்தோட்டமாய் மலர்ந்திட வாழ்த்துகிறேன்

வாழ்க்கையில் நான் கண்ட அன்பும் உன்னிடத்திலே
நான் கண்ட கண்ணீரும் உன்னிடத்திலே

இன்று நான் யாருமில்லா வெற்று நிலமாக இருக்கலாம்

உனக்கு கூட தெரியாது
இந்த வெற்று நிலத்தில் புதைந்திருக்கும் பழைய நினைவு விதைகள் யாராலும் அழிக்க முடியாதென்று
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பே .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (6-Jun-18, 9:15 am)
Tanglish : endrum nee
பார்வை : 809
மேலே