ஏகாந்தத்திற்குள்

கருமேகம்
சூழ்ந்ததும்
என் மனதின்
ஆழத்தில்
மூழ்கி இருக்கும்
முதல் காதலை
வெளிக்கொணரும்!
விழுகின்ற
ஒவ்வொரு
மழைத்துளியும்
அவளின்
நினைவுகளாய்
என்
மனக்குளத்தில்
நிரம்பும்!
காதல் என்ற கல்
அந் நடுக்குளத்தில்
விழுந்ததும்
எழுகின்ற
குறுக்கலைகள்
அவளின்
வட்ட முகம்
கண்கள்
செவ்விதழ்
குறுநகை
பேச்சு
அவளின் நடை என
ஒவ்வொன்றாய்
சுமந்து என்
மனக் கரையை
வந்தடையும் பின்
என்னை
ஏகாந்தத்திற்குள்
இட்டு செல்லும்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (14-Jun-18, 10:57 am)
பார்வை : 113

மேலே