தேசியப் பாடல் (iraivan anbu toothare mettu)

எங்கள் இனிய பாரதம்
கலைகளில், பண்பினில், அன்பினில் ஓங்கிடும்
எங்கள் பாரதம் - இது எங்கள் பாரதம்

ஒற்றுமை ஓங்கிடும் உயர் நாடிது
அறம் பல சிறந்திடும் நாடு(2 )
உயர்வான கலை யாவும் மிகை நாடிது
திறம் மிகு பாரத நாடு (2 )

ஆ..... ஆ..... ஆ...

கங்கை காவிரி கோதாவரி
கவின்மிகு ஆறுகள் பாய்ந்தே (2 )
எந்நாளும் வள நாடாய் செழிக்கக் செய்தே
இனிமை தனை நாளும் கூட்டுதே(2 )

ஆ..... ஆ..... ஆ...





எழுதியவர் : ஸ்ரீ விஜயலட்சுமி (14-Aug-11, 10:18 am)
பார்வை : 407

மேலே