நீ பழகத் துடிப்பதை

பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
நீ உன் அம்சமான தலையை அசைத்து
என்னுடன் நீ பழகத் துடிப்பதை...

தவித்துக் கொண்டே இருக்கிறேன்
அழகாய் சுழலும் உன் விழிகளில்
விழுந்து விட்ட எனது
விழிகளை மீட்கத் தெரியாமல்...

கேட்டுக் கொண்டே இருக்கிறேன்,,,
கூண்டுக்குள் நீ மாட்டி கொண்டு
தவிப்புடன் குரல் கொடுப்பதை .

மனதை பிசையும் உனது குரல்
என்னுள் இறங்கி
உனக்குள் உதவ ஓடி வர தூண்டுது....

கட்டுக்கள் ஏதும் இல்லை
ஆனால் என் கரங்கள்
உன்னை காப்பாற்ற இயலாத
அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்ட கோலம் என்ன??

வீதி வழி செல்லும் நான்,
கூண்டுச் சிறையில் மாட்டி
இன்னும் சில மணி நேரங்களில்
அடுத்தவர்
வீட்டு சமையலில் மணம் பெறப்போகும்
கோழி இனமான
உன்னை பார்த்தால் மட்டும்
என்ன செய்து விட முடியும்???

எழுதியவர் : சாந்தி ராஜி (28-Jun-18, 11:30 am)
பார்வை : 485

மேலே