பழமொழி காட்டும் பண்புகள்

பழமொழி
பின்பற்றினால்
வாழ்வை சுவையாக்கும் பழ மொழி

பழமொழி நூல் வாங்க
காசு கொஞ்சம் செலவழி
அது காட்டும் நீ உயர சில வழி

மூத்தோர் சொன்ன
முதுமொழிகள் அனைத்தும்
நம்மைச் சிப்பிக்குள் வைக்காது
சிந்திக்கவைக்கும் முத்துமொழிகள்

கறிக்கடைக்காரன் கறி அரிவான்
அவனையும்கூட
அறநெறி அறியவைக்கும்
பழமொழிகள்

முதுமொழிகளை மறந்துவிட்டு
நாம் புதுமொழிகளைக்
கற்றுக்கொண்டிருக்கின்றோம்

பழமொழிகள்
நம் முன்னோரின் அனுபவத்தால்
பெற்ற வாய்ப்பால்
நமக்குக் கிடைத்த தாய்ப்பால்
அநீதி செய்யாது காக்கும் தாழ்ப்பாள்

நன்மொழி அறிவுரைகளால்
நம்மைக் கட்டிப்போடும் பூ விலங்கு
மனிதா பண்போடு அதை நீ விளங்கு
அதை மதிக்காமல் மிதித்தால் நீ விலங்கு


கவிஞர் புதுவைக் குமார்
31 , யமுனை வீதி , வசந்தம்நகர் , புதுவை -506110
9942994112

எழுதியவர் : (1-Jul-18, 9:15 am)
Tanglish : pazhamozhi
பார்வை : 78

மேலே