குறையா அன்பு
என் தன் சிறு இதயம்
உன் மேல் - நான்
வைத்த அன்பால் நிறைந்துவிட்டது ,
உந்தன் அழகிய நினைவுகளோடு
ஓய்வில்லாமல் துடித்த - என்இதயம்
இன்று
ஓய்வாக உள்ளபோதும் உந்தன்
நினைவுகளையே சுமந்து கொண்டு இருக்கின்றது
என் கல்லறையில் ......
நான் வாழும் போதும்
உன் நினைவுகள் என்னை சுற்றியது
நான் உயிர்பிரியும் நேரத்திலும்
உன் நினைவே எழுந்தது
இப்பொழுது
நான் இறந்த பின்னரும்
நான் உன்மேல் வைத்த அன்பு குறையவில்லை ....
உன் நினைவுகளால்
என் அன்பு குறையா அட்சயபாத்திரம் ஆகிவிட்டது .......