மாற்றமும் ஏற்றமும்
நாளை என்ன வென்று
நினைவில் நீயும் ஏற்று
எது வந்த போதும்
ஜெயித்து நீயும் காட்டு
தீ என்ற சொல் தீபம் ஆகுமே
நீ என்ற சொல் நிலை ஆகுமே
உதவி கேட்டு தவித்தால்
வாழ்க்கை வெறுத்திடும்
உழைத்து நீயும் ஜெயித்தால்
உலகம் மதித்திடும்
முயன்று நீயும் தோற்றால்
முடங்கி விடாதே
முடியும் என்று எழுந்தால்
தோல்வி நெருங்காதே
வாய்ப்பை நீயும் பிடித்து
வாழ்வில் முன்னேறு
இரவு பகலாய் உழைத்து
படைத்திடு வரலாறு
ஆ. கார்த்திக்