காதலும் கனியும் -

அனுதினம் அழகினம்
உனை நினைத்தென்
மனமது உருகுமே! மறுகுமே!

நடக்கையில் மயிலினம்
பேசும் குயிலினம்
படர்க்கைப் பதுமையை
இடப்புற மமர்த்தி
தன்மை காணும்
அத்தினம், என்றோ! என்று
நாடோறும் நாணெண்ணி
சூடேறும் அடிமன தனலி லென்
காதல் காயும் கனிந்தது கனிந்தது
தனிமையில் கனிதரும் சுவையும் கசந்திட,
இனித்தது இனித்தது
மங்கை மனதின்
மதுரம் இனித்ததை
எம்மனம் தீண்டிட
சரகம் உன் சம்மதம் வேண்டி
நரகம் காண்கிறேன்.......

ஒருகனி இருகிளி
நீயும் நானும் உருகிட உருகிட
காதல்நதியில் நனைந்தே! நனைந்தே!
நாட்கள் கழித்திட ஆசை! ஆசை!

ஆசை நாயகி எம்மனம் பூத்திட, இரவித்திங்கள் நின்பணி பொழிந்திடு, இறைவிப்பற்றி என்கை எழுதிட, பாதை வகுத்திடு...

பரமன் பாலினம்
பாவம் நானடி
சக்தியே, சேர்ந்திடு

காதல் தேசம்
ஆண்டிட அன்பே
அரசனின் அரசி
வேடம் பூண்டிடு....

இராச இராசன் நானே நானே
அன்பே எந்தன், பாசம் முன்னே
ராமன் சீதை காதல்தேசமும்
அன்பே பொய்யின் பொய்யே....

-கல்லறை செல்வன்.

எழுதியவர் : கல்லறை செல்வன் (3-Jul-18, 9:08 pm)
பார்வை : 480

மேலே