காதல்

சொன்னது நீதானா என் மன்னவா,
சொல், சொல், சொல் ................
' உன் மனதில் என்னைவைத்து
உந்தன் நேசத்தால் என்னை நித்தம்
பூஜிப்பதாய்' அன்று நீ கூறியது ,
ஆற்றங்கரை ஓரத்திலே , அன்று ,
அரசமரத்து ஐங்கரன் முன்னால்
நீ சொன்னது ......... மன்னவனே !
ஆனால், இன்றோ நீ என்னைப்
பார்த்தும் பாராமுகமாய் இருப்பதேனோ
நான் அறியேனே -உன் கண்களுக்குத்தான்
என்னைப் புரியவில்லையா -இல்லை
உன் உள்ளத்தில் உயிராய் இருக்கும் என்னை
நீ உறங்காவிட்டாயா உள்ளத்தின்
கதவுகளையும் மூடிவிட்டு .........போதுமடா சாமி
இந்த வேதனை, இனியும் இதைத்
தாங்க என் மனதில் வலிமை இல்லை
உன்னை நான் விரும்புவது உண்மையென்று
நீ நினைப்பாயானால் உன் பார்வையை
என் மீது செலுத்தி வாய் திறந்து சிரித்து,
உந்தன் காக்கும் கரங்களால் என்னை
கட்டி அணைத்து என்னவனாய் மீண்டும்
வந்து என் காதலுக்கு அடைக்கலம் தந்துவிடு ,
இல்லையேல் நீ தரும் இந்த வலியைத் தாங்காது
மாய்ந்துவிடும் உந்தன் இந்த 'என்னுயிர்'
என் உயிர்..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-18, 6:20 am)
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே