நீ தான் என் தேவதை

தென்றல் தவளும் உன் பார்வையினால்
வசீகரப் பூக்களை அள்ளி வீசினாய்
முத்துப் பவளப் பாறையில்
செதுக்கிய பெண் சிற்பமாய்
வந்து என்னில் கவர்ச்சி
மாரி பொழிந்தாய்
காதல் தீ நெஞ்சில்
கொழுந்து விட்டெரிய
காரணமாய் ஆனவளே
பகலவன் திசைமாறி எழுந்து
வான உச்சியில் வந்து நின்று
குளிர்க் கதிரை எங்கும் வீசினாலும்
பாலை வன ஆழ் குளத்தில்
பனிக்கரடிகள் ரெட்டையாய்
வந்து சில்மிஷங்கள் புரிந்தாலும்
ஆண் குதிரை ரெண்டு வந்து
கொம்பு சீவி மல்லுக்கு நின்றாலும்
உன்னோடு நான் கொண்ட
காதல் ஒருபோதும் அழியாது ...

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (22-Jul-18, 12:45 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 554

மேலே