அவளுக்கு யாரும் நிகரில்லை
அவளுக்கு யாரும் நிகரில்லை...
தாயின் அன்பைத் தேடியபோது தாயாக வந்தவள்...
கலக்கத்தில் நின்று தவித்தபோது நம்பிக்கை தந்தவள்...
துவண்டுபோன நிமிடங்களில் உயிர் நட்பாக வந்தவள்...
ஆறுதல் கிடைக்கா தருணங்கள் எல்லாம் அன்பை அள்ளி வழங்கினவள்...
வாழ்வை வெறுத்த காலங்களில் திகட்டும் காதலால் உயிரை மீட்டவள்...