காதல் என்றோ கானல் நீரை போல

அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில்
அவ்வப்போது வரும் கனவில்
நீ என்னை அணைத்தவாரே
அன்பாய் அளாவி கொண்டிருப்பாய் !
அக்கணமே அலைபேசியில் உன்னை
அழைத்து கனவின் நிகழ்வை சொல்ல தோன்றும் எனக்கு !
என்ன செய்வது !
நம் காதல் என்றோ "கானல் நீரை " போல
மறைந்தோடி போனதை நினைவின்றி !
அழுது அழுது கண்ணீரால் மறைத்து விடுகிறேன் !