காதல்
நல்லவேளைதான் இன்று
நான் பிழைத்துக்கொண்டேன்
இன்றும் நீ எனைப்பார்த்தும்
பார்காததுபோல் போய்விடுவாயோ
என்று நினைக்கையில் -பெண்ணே
உந்தன் அழகிய மலர் விழிகளிரண்டும்
மலர்ந்து என்மேல் வீசியதே
ஓர் பார்வை .....அது என்னை
காதல் மழையால் நனைத்திட
நான் கேட்டேன் அது கீதமும்
இசைத்திட என்னை
'அன்பே வா' என்றழைத்திட
மெல்ல நான் அடிமேல் அடிவைத்து
சிறிது தயங்கியே உன்னை நான்
நெருங்கிட உன் இதழ்கள் விரிந்து
புன்னகைக்க ..... நான் என்னை அறியாமலே
'ஐ லவ் யூ' என்றிட புன்னகை சிரிப்பானதே
சிரிப்பில் சொல்லிவிட்டாய் உன் பூரண
சம்மதம் ....எனக்கினி என்னவேண்டும்
காத்திருந்த என் கண்களுக்கு உன் பார்வையும்
அது ஏந்திவந்த காதல் உறவும் கிட்டிட..
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்
என்னுளத்தில் இப்போது நீ மலர