வண்ணத்துப்பூச்சி சிறகுகள்
வண்ணத்துபூச்சியின் சிறகுகள்...
தென்மேற்கு பருவக்காற்று
தென்றலாய் வீசுமென
தெம்மாங்காய் இருந்து விட்டோம்...
தேக்கு மரம் சாய தெப்பமாய்
பெய்ததில் தெருவும் மூழ்கியதே..
வறண்டு போன அனையெல்லாம்
நொடிக்குள் நிரம்புமென
நினைக்காத பொழுதினிலே வெள்ளம்
நனைத்து விட்டு சென்றது
நான்காவது மாடியையும்...
பேருந்து ஓடிய சாலையில்
பெருவெள்ளம்..
விமானமும் விதிவிலக்கல்ல
ஒட்டு மொத்தமாய்
வெள்ளம் தான்...
எங்கள் வாழ்வும் மழையில்
நனைந்த வண்ணத்துப்பூச்சி சிறகுகளாய் சாயம் போனது...