அரசியல் குக்கல்கள்

அரசியல் குக்கல்கள்
(எண் சீர் விருத்தம் )

அரசியலில் நுழையும்போ தவர்இவர்குக் கலென்றார்
இவரதிகம் ஆட்சேர்த்து பலம்பெறவோ பலதும்
மறந்துவிட்டு முன்னாட்சி நடத்தியகுக் கலைபோல்
இவர்நடந்து கக்கிக்கக் கினதைவிழுங் கியுண்டார்
மறத்தமிழர் ஆங்காங்கே சிதறியோடி உறுப்பாய்
சிறந்துகலந் தோமென்று அவரையேதான் மறந்து
குரைத்தமிழ னாய்மாறி யவரவரி டமுமேன்
உறவுகொண்டு கெட்டுப்போ யலைந்ததுமென் உறவே !!


விளக்கம் :

குக்கல் = கக்கியதை தின்னும் நாய்

எழுதியவர் : பழனி ராஜன் (25-Aug-18, 9:41 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 665

மேலே