அவன் திங்கள், அவள் குமுதம்

அவனைக்காணாது அவள்
உண்ணவில்லை கண்மூடி கிடந்தாள்
மூலையில் ஒருக்களித்து
தூரத்தில் அவன் வரவைக்கண்ட
தோழி அவள் விரைந்துவந்து
கண்மூடிக் கிடந்தவள் காதில்
வந்து சொல்ல,மெல்ல மெல்ல
கண்கள் விரித்தாள் அவள்
மேகத்தைக்கிழித்து வந்த
திங்களென வந்தான் அவன்
அவளருகில், குமுதமாய்
விரிந்து மலர்ந்தது அவள் கண்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Aug-18, 12:52 pm)
பார்வை : 76

மேலே