பரணிவாசம் ----காந்தி காவியம் எழுதியவர்

காந்தி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் துக்கத்தில் ஆழ்ந்த இராமாநுசக் கவிராயருக்கு அத்துயரத்தோடே சில வரிகள் தோன்றின. “அறக்கனியே, அன்பரசே, அருந்துணையே, அறிவாற்றல் சிறந்தொளிரும் செந்நலமே, செய்வினையின் பயன்அறவே, துறந்தாற்றும் பெருந்துறவே, பேயுலகம் புலம்பிவிழ, மறைந்தனையே நிரந்தரமாய் மதியிழந்தார் செய்கையினால்!” அன்று எழுதத் தொடங்கி 27 ஆண்டுகள் கழித்து ‘காந்தி காவியம்’ என்ற நூலை வெளியிட்டார். ‘காந்தி காவியம்’ எழுதிக்கொண்டிருக்கும்போதே காந்தி பற்றிய நாடக நூல் ஒன்றையும் முடித்திருந்தார். இவர் எழுதிய பூகந்த வெண்பா 10 படலங்களுடன் 1019 அந்தாதி வெண்பாக்களால் ஆனது. கட்டபொம்மன் கதையையும் பாடல்களாய் எழுதியிருக்கிறார். பல்வேறு மகத்தான நூல்களைப் படைத்த இராமாநுசக் கவிராயர் மீது வெளிச்சம் பாய்ச்சும் விதமாக வெளிவந்துள்ளது கள்ளபிரானின் ‘இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும்’ நூல்.

இராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும்

டி.ஆர்.கள்ளபிரான்

காவ்யா பதிப்பகம்

கோடம்பாக்கம்,

சென்னை - 24.

விலை: ரூ.150

9840480232

-----------------
இரா.நாறும்பூநாதன்

எழுதியவர் : (29-Aug-18, 5:41 am)
பார்வை : 38

மேலே