வண்ண வண்ண பூச்சி

வண்ண வண்ண
உடையணிந்து
பட்டுப்போன்ற
மேனி வடித்து
சிக்கனமாய்ப் பறக்கிறேன்...
தொட்டுத் திறக்கும்
பூக்களை
தொட்டதரியாமல்
ரசிக்கிறேன்...
மெட்டுப்போடும்
வான் நிலவை- நான்
வர்ணம் குலையாமல்
கவர்கிறேன்...!!!
-வண்ணத்துப்பூச்சி