வன்முறை
வன்முறை...
மனிதனே
வன்முறை உன்
கையில்
வசந்தம் விடுமுறையில்...
மனிதனே
மனிதம் இழப்பது
முறையோ
தீட்டிய
கூர் முனை
அறியாது தீட்டியது
எவரென்று
அது பாயும்
ஒரு நாள்
மார்புகளை தேடி
துயில் காணா
துயர்நிலை
தானாக சேர்ந்ததன்று
நெஞ்சத்தில் வஞ்சம்
கொண்டு
நெடுநாளாக பழி
தீர்க்க
கூர்வாளின் துணையோடு
நிற்கின்றாய்
பயத்தோடு...
ஆயுதம் ...🔪🤺🗡
கைப்பாவை
சொன்னதை
செய்யும்
யார் கையிலோ ?
நீ
தொட்டது
ஆயுதம்
அழிக்காமல்
திரும்பாது
நீ
மடிந்தாலும்
இன்னொருவனை
எதிர்பார்த்து
தொட்டவன் கெட்டான்...