யாமார்க்கும் குடியல்லோம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஏட்டைக் கண்டிராத அரசியல்வாதி
கோட்டையில் குடிகொண்டது போல,
வேட்டைக்காரன் தோரணையில் வந்து
சாட்டை சுழற்றுவது எதற்காக...?
குரங்குகளும் குதிரைகளும் ஏனைய குருவிகளும்
மரங்களும் மதில் பூச்சுகளும் மருத்துவ உபகரணங்களும்
உரங்களும் உதிரிப்பூக்களும் உழுவதற்கு சேனைகளும்
ஒருநாளும் இங்கு விலை போனதேயில்லை...
துறந்த உயிர் தூவானம் தொடும்
வறண்ட மண்ணும் வாய்க்கால் கோரும்
இறந்த பயிர் இடுகாடு போகும்
துறவியர் திண்ணத் துளிர்ந்தது நாளும்...
கையடக்க கணினிகளில் வர்த்தகம்
மைப்பூசிய மந்தாரைகளின் நாட்டியம்
சைவர்கள் பூசைகளில் மாமிசம்
பைந்தமிழ்த் திருநாட்டில் நாசிசம்...
நாளுக்கொரு கதைசொல்லி நாடாளும் நாயகனே
ஆளுக்கொரு விதைஊன்ற நாடாததேன் மேயவனே...?