நிம்மதி கொள்ளும்

மனித ஆற்றலின் ஊற்று
மன அமைதி,
நிதானமும், அமைதியும்
நிம்மதியை கொடுக்கும்,
நிதான பயணம்
நீண்ட ஆயுளைத் தரும்

சாகும் வரை
சஞ்சலமில்லா வாழ்க்கை
அமைவது
இறைவன் அருளியது,
நிம்மதி எப்போதும்
இறைக்கு ஒப்பாகும்

உறவும், பிள்ளைகளும்
ஒற்றுமையாய் இருந்து
நாலு பேர் மதிக்க
நல்வாழ்வு வாழ்ந்தபின்
முன்னே வந்தது முன்னே சென்றால்
மனதுக்கு நிம்மதி

அறுபது வயதைத் தாண்டி
அடியெடுத்து வைக்கும்போது
வேண்டாத நோயும்
வேதனை தரும் தனிமையும்
நெருங்காதிருந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி

பிள்ளைகளின் திருமணமும்
பட்ட கடனும்
நிறைவாய்
நடந்து முடிந்திருந்தால்
உறவுகளும் மதிக்கும்
உள்ளமும் அமைதியுறும்

புவியில் யாருக்கும்
பாரமாகிப் போகாமல்
பந்த பாசம் நிலைக்க,
பணி நிறைவுற்றதும்
பென்ஷனும் கிடைத்துவிட்டால்
முதுமையில் நிம்மதி

மனித வாழ்வில்
முடியும், பல்லும்
மண்ணை தொடாதிருக்க,
மெய் தொடுமா?
மரணமிப்ப இல்லையென
மனதுக்கு நிம்மதி

கடைசி மூச்சு வரை
காலைப் பொழுதுகளில்
கால் நடை பயிற்சி செய்தால்
காலனும் நெருங்கமாட்டான்
காலடியில் தான் மண்ணிருக்கும்
மனம் நிம்மதி கொள்ளும்

எழுதியவர் : கோ. கணபதி. (14-Oct-18, 5:18 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : nimmathi kollum
பார்வை : 58

மேலே