பெண்ணை மதித்து வாழவேண்டும்
உன் மனைவி படிதாண்டா பத்தினியாய்த்தான்
இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றாய் ஆனால்
நீயோ மாற்றான் மனைவி என்று தெரிந்தும் மற்றோர்
பெண்ணைப்பார்த்து பல் இலளிப்பதேன் அவளும்
உன்னைப்போல் ஒருவன் மனைவி என்பதை மறந்தாயோ
பனி நிமித்தம் உன்னோடு பேசி பழகும் பெண்ணை
தப்பு கணக்கு போட்டு ஏதோ ஓர் நேசம் நாடி அண்டிட
தக்க சமயம் கிடைத்தால் நீ வரம்பு மீறியும் நடப்பதென்ன
உன் பின்னால் ஓர் இருண்ட வாழ்வு அதை தெரிந்தவர்
தட்டிக்கேட்டால் பிய்த்துக்கொண்டு வருகிறதே கோபம் உனக்கு
ஆணும் பெண்ணும் சமமே என்று நினைக்கத்தொடங்கிய உலகில்
பெண்ணை ஒரு கை பொம்மையை நீ நினைப்பது ஏன்
உன்னில் பாதி அவள் என்று அன்றே அவன் கூறிய அறம்
உனக்கொரு நீதி அவளுக்கோர் நீதி என்று நீ
நினைத்து வாழ்ந்திட்டால் அது உன்னில் வளர்ந்த
தீய சக்தி, அதை நீ மாய்த்துவிடின் நீ மனிதன்
உள்ளத்தால், உணர்வால், எண்ணத்தால் பெண்ணை
மதித்திடு அவள் மதிப்போடு வாழ உன் பலம் தந்திடு
காத்திடு அவளை அவள் தன மானத்தை அவளை
நாளைத்தாய் என்பதை மறவாது கருத்தில் கொண்டு