எல்லாம் பறவைகளே

பரிந்துரைகள்
சிறகுகளில் வருடல்
அறிபவனுக்கு ஆதாயம்
குறையே கூறிக்கொண்டிருந்தால்
கற்பனைச் சிறகுகள் வாடும் சோர்ந்துவிடும்
ஊர்க் குருவிக்கு ஓர் உயரமென்றால்
காக்கைக்கு ஓர் உயரம் கிளிக்கு ஓர் உயரம்
வான்முட்டப் பறக்கும் பருந்திற்கும் கருடனுக்கும் ஓர் உயரம்
எல்லாம் பறவைகளே
அதனதன் உயரத்தில் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-18, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : ellam parvaigale
பார்வை : 99

மேலே