அந்த ஜலஜீவன் நன்றி நவின்றிருக்கும்

வயல்வெளி வழியே
நடந்து செல்கையில்
வழியே ஒரு வாய்க்கால்...
ஓடிய தெள்ளிய நீரை
உள்ளங்கை இரண்டிலும்
அள்ளி எடுத்தேன் அருந்திட
நீருடன் ஒரு மீன் குஞ்சும் மின்னியது
ஏந்தி நின்றேன் மத்ஸ்யா அவதாரத்து மன்னன் போல்
நீர் ஒழிகிக் கொண்டிருந்தது கைவழியே ...
உணர்வு பெற்று
மீன்குஞ்சை மீதி நீருடன் வாய்க்காலில் விட்டேன் மெல்ல
பாய்ந்தோடியது அந்த ஜலஜீவன்
நன்றி நவின்றிருக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-18, 5:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 116

மேலே