காதலில் சோகம்
வாழ்க்கை எனும் வழக்கில்
வாதி பிரதிவாதியாய் நாம்
வாய்தாக்களய் பார்வைகள்
வழக்கை சொலலாமலே
வழியின்றி பிரிந்தோம் நாம்
பிரிவு தீர்ப்பாகி மரணித்து
போனது மனதில் நம் காதல்
உரக்க சொல்ல முடியாமல்
உள்ளுக்குள் அழுது நிற்கும்
ஒருவன் நான் இன்னொருத்தி நீ