என்னவளே பெண்ணவளே

அன்னத்தின் நடை
சின்னத்தாய் இடை
மெல்லிய உடை - உன்
மேனியோ பெரும் கடை
உனை கண்டதும் என் நடை
பொடிப் பொடியாய் உடைந்தது உன் பிழை

ஆழியில் பிறந்த முத்தே
என் அத்தை பெற்றெடுத்த வித்தே
ஆயுள் முழுவதுமான என் சொத்தே
என் மனம் உன்னால் ஆனது பித்தே
உனை ஆலிங்கம் செய்கிறேன் பெண்ணே
என் ஆராதனையை ஏற்றுக் கொள் கண்ணே..,
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (3-Nov-18, 1:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 115

மேலே