பிறர் நலம் வேண்டி

கொஞ்சும் புறாவின்
பிறர் நலம் கண்டு வியக்க
நெஞ்சம் மிஞ்சும்
கடமை உணர்வில்
காதல் கடிதம் கவ்விய இதழுடன்

காதலி உள்ளம் நெகிழ்ந்திட்ட பொழுதில்
எழுதிய அன்பு மடல் அது
சற்றும் தாமதமின்றி
விரைந்து பறந்து காதலன் கரத்தில்
காதலில் கனிந்த கடிதம் புதைத்து
காதலன் படித்து பதில் தர வேண்டி

ஒரு சில நிமிடம் நேரம் காத்து
அவன் தரும் மடலை
அழகிய தன் இதழில் கவ்வி
மீண்டும் சேர்த்தது காதலி கரத்தில்
காதலன் கொடுத்த
காதலில் கனிந்த கையெழுத்திட்ட
காகிதம் தன்னை ,

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Nov-18, 12:18 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : pirar nalam venti
பார்வை : 166

மேலே