சுருளான கேசம் சுருளாத நேசம்
முருகானந்தம்...
நண்பன் இவனிடம்
நட்பாடலில் இருக்கிறது
நிறைய ஆனந்தம்...
சுருளான கேசம்
சுருளாத நேசம்
கணீர் குரல்
இதெல்லாம்
இவனது அடையாளம்...
இவன் மனம் விசாலம்
இதுவே இவனது விலாசம்...
இந்த சிற்பம் தன்னைச்
செதுக்கிய சிற்பிகளோடு
தானும் சேர்ந்து தன்னைச்
செதுக்கிக் கொண்டது
எல்லோரும் விரும்பும் வண்ணம்...
நண்பன் முருகானந்தம்...
பயணிக்கும் உன்
வாழ்க்கைப் பாதை எங்கும்
வசந்தங்கள் வரமாகும்...
வளங்கள் வசமாகும்...
நண்பனே... ஆரோக்கியம்
முதன்மையாய்க் கொண்டு
வளங்கள் எல்லாம் பெற்று
வாழ்க பல்லாண்டு...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
👍🙏🌹🙋🏻♂🤝