கனவுகளுக்கு பிறந்த நாள்

காதல் முளைக்கலாம்
காத்திருந்து தவிக்கலாம்
களைந்து போனவைகள்
கண்டெடுக்கலாம்
கனவுகள் கூட கட்சி தாவலாம்
சோகமோ...சுகமோ...
மூளைக்குள் முக்தி பெறலாம்
விண்கலம் பல விண்ணுக்குள்
விதி மீறி பறக்கலாம்
இயந்திர வாக்குகளின் நாக்கு
தந்திரமாய் தரணி ஆழலாம்
புயலோ மழையோ அலையோ
பூமிக்குள் புகுவிழா நடத்தலாம்
சாதி மதம் வைத்து தோண்டிய
அரசியல் குழிக்குள் பலர் புதையலாம்
கேன்சரை விட கூடுதலாய்
நோய்கள் பரிசு வழங்கப்படலாம்
அரசும் கூட தனியாருக்கு
தாரை வார்க்கப் படலாம்
பண்பாடு பாரம்பரியம்
தரை மட்டம் ஆகலாம்
ஓட்டுக்காய் இறந்தவர்கள்
உயிரோடு திரும்பலாம்
ஆங்கிலனுக்கு புத்தாண்டு
அடிமை நமக்கும் தானோ..!
ஆங்கிலப் புத்தாண்டை
கொண்டாடி வரவேற்றவர்கள்
எவரும் இதுவரை
தேசவிரோதிகள் ஆனதில்லை
அன்று..!
ஆங்கிலேயனை எதிர்த்த
நம் தாத்தாக்கள் தேச பக்தர்கள்
இன்று
ஆங்கிலேயனது ஆண்டைக் கொண்டாடும்
பேரன் பேத்திகள் நாம் தேச பக்தர்கள்
ஆண்டு போனவன் இந்தியன்
மாண்டு போகட்டும் என
தந்து விட்டு போனதல்லவா...
கொண்டாடித்தான் ஆகவேண்டும்
ஆங்கிலேயர் நாம்... வாழவேனும்...
இந்தியா பெயர்
பிரிட்டிஷ் 2 ஆக மாற்றவேணும் ..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (1-Jan-19, 8:05 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 3567

மேலே