பசுப் புரட்சி

சுவரொட்டியில் சிரித்துக் கொண்டிருந்த
தலைவனை
பசியால் உரித்துத் தின்றது பசுமாடு !
பார்த்த தொண்டன் வெகுண்டு
கோலெடுத்து ஓங்க....
நாட்டைச் சுரண்டித் தின்கிறான்
உன் தலைவன்
அவன் வெத்துப் படத்தை உரித்து தின்றதற்கு
உனக்கென்ன கோவம் என்பதுபோல்
பசு கொம்பைச் சிலிர்த்து புறப்பட்டு எதிர்க்க ...
பிடரியில் கால் பட தலை தெறிக்க ஓடினான்
தொண்டன் !!!
தேர்தல் நெருங்கிகிக் கொண்டிருக்கிறது
பசுவே உன் புரட்சி ஓங்குக !
பசுப்புரட்சியில் வீரப்பசுவே
இந்த நாடு விழித்தெழட்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-19, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 152

மேலே