ஊமையின் இராகம்
இசைக்க மறந்த
இராகங்களை...
இரசிக்க மறந்தது ஏனோ..?
இன்பமான வாழ்விதிலே..
பேசா மடந்தையாய்..
பேசாமல் மௌனம்
சுமப்பது ஏனோ...?
மனதில் எழும்
இசை இராகங்களை
மொழி பெயர்க்க..
மௌன மொழியினை..
'ஊமையின் இராகமாக'
வெளிப்படுத்துகிறாயோ...?
நினைவுகளை நீந்த விட்டு - நீ
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க...
மீளா மௌனத்தில்
அமிழ்ந்து விட்டவளே...?
எப்பொழுது உதடசைவாய்...- என்
நினைவுகள் உயிர்பெற...