நாடி சோதிடம்

நாடி சோதிடரிடம் பலர் சென்றனர்
ஒவ்வொருவருக்கும் அவர் பெயர் பிறப்பு
எல்லாம் சொல்லி அவரவருக்குரிய
எதிர் காலப் பலனும் சொல்லிற்று
ஒரு சிலர் சென்றனர்
அவர்களுக்கெல்லாம் ஒரே விருப்பம் கேள்வி !
அது நாடாள வேண்டும் என்பது ..
ஒவ்வொருவராக உள்ளே சென்றனர்
நாடி சோதிடம் எல்லோருக்கும் ஒரே பதில்தான் சொல்லிற்று ...

நாடாள வேண்டுமென்றால் நாட்டு மக்கள் முன் போய் நில்லு
நாடி சோதிடர் முன் வந்து நிற்காதே !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-19, 9:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே