புனிதமான காதலுக்காக

அவள் வந்தே விட்டாள்
எதிர் பார்த்தபடி
அவனுக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
தவிர்க்க இயலாதவாறு
அவனுக்கும் சில முக்கிய வேலைகள்
அவனை இறுக்கி பிடித்தன .
. அவன் தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் ,,
அவனும் விடாப்பிடியாய் நின்று
வேலைகளை முடித்துவிட்டு போனால்
அவளுடன் நிம்மதியாக நேரம் செலவிட முடியும்
என்ற நல்லெண்ணம், ஒரு நப்பாசை ,.
அவள் தனக்காக தனியாக நிற்கிறாளே
யாரும் அவளை தப்பாக நினைத்துவிடக் கூடாது
என்று பதட்டப்படுகிறான் .
சந்துரு கொஞ்சம் வெளியில் வந்து
இன்னும் ஐந்து நிமிடம் மட்டும் எனக்காக ....ப்ளீஸ்,
அவளுக்கும் அவன் வேலையில் படும் சிரமம்
புரிகிறது என்ன செய்வது /
இருதலைக்கொள்ளி எறும்பு போல் அவன் நிலை ,
அவனும் ஒருவாறு தன் வேலையை முடித்து
மனேஜரிடம் விடை பெற்று வியர்க்க வியர்க்க
அவளிடம் வந்தான் .
அவனைப் பார்க்க அவளுக்கும் இரக்கமும், கூடவே காதலும்
சந்துரு நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்
அதுபோல் நீயும் என்னை நேசிக்கிறாய்
ஆனால் நம் இருவர் இடையே
பலரின் கண்கள் ஊடுருவிக் கொன்டே உள்ளன .
ஆகையால் நான் இப்படி வந்து நிற்பது சரியில்லை ,
ஆகையால் நாம்
தொலைபேசியில் நேரம் கிடைக்கும் போது பேசுவோம்
என்றும் நான் உனக்காக ,.... இப்பவெல்லாம்
சந்துரு எனும் நாமத்தினால் என் இதயம் சீராக துடிக்கிறது.
சிரிக்கின்றனர் காதல் மேலிட ,
ஒவ்வொரு இதயத்துடிப்பும் சந்துரு, சந்துரு என்கிறது
,அவள் கூறிய வார்த்தைகள் அவன் காதலை இறுகச் செய்தது ,
அவன் அவள் மீது கொண்ட காதல் அவனையும் மீறியது ,
ஆசையுடனும் உண்மைக் காதலுடனும்
அவளைக் கட்டியணைத்தான்,
ஆனந்தக் கண்ணீர் இருவர் கண்களிலும் வழிந்தது
புனிதமான இக்காதல் நிறைவேற இக்கண்ணீர் சாட்சி
இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு விட்டது ,
இருவர் மனமும் புனிதமான காதலுக்காக........

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Feb-19, 12:21 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 332

மேலே