தேசத் தாயின் குரல்---பாடல்---

காதல் ரோஜாவே மெட்டில் :


பல்லவி :

பாவத் தீயாலே வெந்தேன் நான் வெந்தேன்
நெஞ்சே எரிகிறது உன்னால்...

புற்றுக்குள் பாம்பாய் நாட்டுக்குள் நீயோ?...
நின்றாடும் போதே நஞ்சுக்குள் நானே
திண்டாடுறேன் தீங்கோடுதான் நில்... நில்...

பாவத் தீயாலே...


சரணம் 1 :

பெண்கள் செல்லும் பாதையில் காம வேடன் பாதகன்
பள்ளிக் கூடம் போகையில் பாவம் செய்யும் போதகன்
நெல்லைச் சேர்க்கும் வேர்வையில் கொள்ளி வைக்கும் பாவிகள்
மீனைத் தேடும் வாழ்க்கையில் தள்ளி நிக்கும் சேவைகள்

நேசிக்காது யாரோ?... தாயைக் கொன்று விட்டார்
பேசிக்காது ஏனோ?... வாயில் வந்து சுட்டார்
என்மேனிதான் ரத்தங்களே நில்... நில்...

பாவத் தீயாலே...


சரணம் 2 :

நீதி செத்துப் போவதால் நீண்டு செல்லும் தீமைகள்
சாதி வித்துப் பூப்பதால் சாகும் வண்ணச் சோலைகள்
காட்டுத் தீயில் மாட்டினால் காக்க என்ன தாமதம்
ஆட்டுக் குட்டி மேய்வதால் ஆளைக் கொன்ற ஆணவம்

ஆளுகின்ற போது ஊழல் செய்து பேசும்
ஆடிநின்ற போது ஊழல் பற்றி ஏசும்
உன்னாலதான் குற்றங்களே நில்... நில்...

பாவத் தீயாலே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 5:01 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 122

மேலே