அன்பே கவசம்---வண்ணக் கலிவிருத்தம்---

வா இறைவா...


#இயல்_தரவினைக்_கொச்சகக்_கலிப்பா :

துளையிடும் யாக்கையில் துன்பங்கள் ஞான்றும்
சளைத்திடா நெஞ்சொடு தன்வலிகள் தாங்கி
இளைத்து நரம்புடன் என்புகள் மண்ணில்
முளைத்தெழும் பூந்தளிராய் முன்றலை நீட்டக்
களையெடுத்துக் கஞ்சிக் கலயம் சுமப்பார்
விளைநெல் அறுத்ததை வீடுவந்து சேர்ப்பார்
அளைவாழும் பாம்பகத்தோர் அந்நெல்லை ஏற்றும்
விளைவித் தவரை விலக்குதல் ஏனிறையே...

******************************

அன்பே கவசம் :

#வண்ணக்_கலிவிருத்தம் :

நஞ்சுதனை விஞ்சுமொழி நங்கைமன மொன்றாள்
நஞ்சுவலி வந்தநொடி நின்றவுட லங்கே
அஞ்சிவிழ அன்புமனை அன்றதனை வென்றே
செஞ்சுடரை உண்டவிழி சிந்துமழை மஞ்சே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 8:57 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 2598

மேலே