ஊக்கமது கைவிடேல்
பசி ஏப்பத்திற்கு
கொள்கைகள் இரையாகாமல்
சில பக்கங்களின்
பிதற்றுதல் கண்டு பின்வாங்காமல்
நம்பிக்கை நாமமிட்டு
புன்னகையுடன் பிற்பாதியை எதிர்கொள்
துரதிருஷ்டம் என்பதே
தூர அதிர்ஷ்டம் என்பதன் திரிபாகும்
தொடர்கதையாயினும்
தொடரும் கதை அல்ல என்பதை உணர்
நடைவண்டி ஏரியேயினும்
உன் நடை போட்டு நகர் ...