வளர்பிறை

ஈரைந்து திங்கள் தழைத்த
பிஞ்சுக் குழந்தையின் நகைப்பில்
வளையும் கீழண்ணம் போல்
சிரிக்கிறது வளர்பிறை நாளின் நிலா

சாளரம் வழியே கதிர்வீசி
படுக்கையறைப் பாயில் பங்கு கேட்டு
அடம்பிடிப்பதால் தூங்கா என் தூக்கம்
என்னைத் துளைத்தெடுக்க

திரைச்சீலை கொண்டு விரட்டினேன்
சீலையின் நுண்ணிலை வழியே
மெல்லிய ஊசியாய் வீசி
என் மீது படர்கிறான் முழுதாய்
இந்த நள்ளிரவில்

எழுதியவர் : mariselvam (13-Apr-19, 11:20 am)
சேர்த்தது : Mariselvam
பார்வை : 51

மேலே