உலகமே கற்றுத்தந்ததேஅடுத்த ஜென்ம வாழ்க்கையை

பிறரோடு நம்பிக்கை அடைவதும்
நம்பிக்கை நொடியினில் உடைவதும்
உலகத்தின் அழிவின் அறிகுறி தான்..
அலைமோதும் ஏக்கங்கள் விழிகளில்
தவரென்று உணர்ந்திடும் நொடிகளில்
உயிர்மூச்சை துரந்திடும் பிறப்பிது தான்..
நீரைத் தூவியது என்வானம்
நீரைத் தூவியது...
சாயம் நீங்கியது எந்நெஞ்சில்..
சாயம் நீங்கியது..
சின்னஞ்சிறு எந்நெஞ்சினிலே-உன்
வண்ணத் தமிழ்வந்து வாழுதே!
கண்கள்ரெண்டும் உன்னைக் கண்டதுமே-நீ
சிற்பம் என்றே கூறுதே..
நீரைத் தூவியதும்
சாயம் நீங்கியது..
நீரைத் தூவியதும்
சாயம் நீங்கியது..
எந்நெஞ்சில்..
காதல் வாசத்தினை என்னுள்ளே
நீயேன் தூவிச்சென்றாய்?
எந்தன் தொழில்மறந்தேன் பெண்ணே
உன்னுள் விழத்துணிந்தேன்..
எந்தன் கண்ணில் தூசியொன்று
நீரையூற்றித் தூரம் சென்றான்
அந்த நீரும் காதலென்று
பின்பு சொல்லி என்முன் நின்றான்..
கருவிலே உடல் கோற்றவன்
உன்னாலே உயிர் கலர்கிறேன்..
சிட்டுக்குருவிகளும் என்னைக்
கொத்தி தின்றிடுதே..
மண்ணில் பூச்சிகளும் என்னுடலை
வீடாய் மாற்றிடுதே..
கதிர்களும் புதிர்களும்
தினம் என்னைத் தாக்கிடுதே..
திரைகளில் தெரிகின்ற
எல்லாம் என்னை ஏமாற்றியதே..
உலகமே கற்றுத்தந்ததே
அடுத்த ஜென்ம வாழ்க்கையை...

எழுதியவர் : H.S.Hameed (22-Apr-19, 9:57 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 278

மேலே