கோபக்குமாரு ஆவேசக்குமாரு

ஏன்டி பட்டணத்துக்காரி எம் மவ முத்தம்மா மருமவளே சுவ்வாதி, நீ அதிருஸ்டக்காரிடீ. மொதப் பிரசவத்திலேயே ரண்டு ஆம்பளக் கொழந்தைங்களப் பெத்திருக்க. ரொம்ப சந்தோசமா இருக்குதடீ.
கொழந்தைங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கீங்க?
@@@@@
பாட்டிம்மா தமிழ்ப் பேருங்கள ஒதுக்கித் தள்ளற காலம் இது. இந்திப் பேருங்கள தமிழ்ப் பிள்ளைங்களுக்கு வைக்கறதுதான் மதிப்பு மரியாதை. ஒரு கொழந்தை பேரு ஆவேஷ்குமார். இன்னொரு கொழந்தை பேரு கோபக்குமார்.
@@@
ஆவேசக்குமாரா? ஏன்டி அந்தப் பையன் வளந்து ஆவேசம் பிடிச்சவனா அலையறதுக்கா அவுனுக்கு ஆவேசக்குமாருன்னு பேரு வச்சீங்க. இன்னோரு பையன் கோபக்குமாரு. அவன் வளந்து கோபக்காரனாத் திரியறதுக்கா அவனுக்குக் கோபக்குமாருன்னு பேரு வச்சீங்க?
@@@@@
பாட்டிம்மா, பசங்க பொறந்த நேரப்படியும் ராசிப்படியும் அந்தப் பேருங்களத்தான் வைக்கணும் சோதிடர்கள் சொல்லீட்டாங்க. நாம என்ன செய்யறது?
@@@@@
தமிழர் மாதிரி தன்மானம் இல்லாத சனங்க யாருமே இல்லடி. தாயைவிடச் சிறந்தது தாய்மொழிங்கறது படிச்சவங்களுக்கே தெரில. வெக்கக்கேடுடீ.
■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆
Kopakumar = meaningless name. பலர் இப்பெயருடன் உளர்.
Avesh = Lord of the universe.
Kumar = son, prince, boy

எழுதியவர் : மலர் (1-May-19, 10:28 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 70

மேலே