அலைகள் ஓய்வதில்லை

இதோ மேகங்கள்
கருவண்ணம் பூசிக்கொண்டு
ஆழகாய்
உன்னை போல்...
வீசி சுழற்றிடும்
வன்காற்று
கலைத்து போகும்
நின் குழலை
என் மூச்சு காற்றோடு...
அனல் அறிந்திருப்பாய்
நின்தன் மயிர்கால்களில்
அது
என் சுவாசமென...
எனக்கு சொந்தமில்லா
கடலின் கரையில்
காத்திருக்கிறேன்
காற்றோடு
காதில் பேசி
மழையோடு மனதில்
இறங்கி....
எதாவது
ஓர் அலையில்
நீ!
எனை சேர்வாயென...
அலைகள்
ஓய்வதில்லை....?

எழுதியவர் : சுரேஷ் குமார் (18-May-19, 12:02 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 233
மேலே