அனிச்ச மலர்
அனிச்ச மலர்
நான் மலர்
என்னையும் பெண்ணையும்
இந்தச் சமூகத்தில்
கசக்கி எறிகின்றனர் சிலர்
பூவையிடம்
சிலர்
நடந்துகொள்வதைப்
பார்த்தால்
பூ வான எனக்கே
அவர்களை ப்பூ
என்று உமிழத் தோன்றுகிறது
நீங்கள்
செய்வது கலப்புத்
திருமணமே இல்லை
நான் ஒரு சாதி
வண்டு ஒரு சாதி
நான் செய்வதே
கலப்புத் திருமணம்
பாசம் நேசம்
குறைந்தாலும்
வாடாத மனிதர்களுக்கு
மத்தியில்
நான் வாசம் வீசக்
குழைந்தாலே வாடும் மலர்
அன்று
முல்லைக்குத் தேர்
கொடுத்தார்கள்
இன்றோ
சில பிள்ளைகளுக்கு
தந்தை பேர் கொடுக்க
ஆள் இல்லை
நான்
மணம் வீசிய கொடியில்
வாழ்ந்தது போதும்
இளைஞர்களே
என்னை உங்கள்
தேசியக் கொடியில்
மலர வையுங்கள்
குற்றம் புரிவோரை
வையுங்கள்
நாடு மணக்கட்டும்
வீடு நலத்தில் கணக்கட்டும்